தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
2018-2019ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்
சிறுதுறைமுகங்கள் மேம்பாட்டுக்காக ரூ.13,605 கோடி நிதி ஒதுக்கப்படும்.
மீன்வளத் துறைக்கு ரூ.928 கோடி தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
அண்ணா பல்கலைகழகத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ 1,252 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கே.பரமத்தியில் 282 குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டம்
பஞ்சாயத்து சாலைகள் ரூ.1,142 கோடியில் மேம்படுத்தப்படும்.
பள்ளிக்கல்விக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கப்படும். – ஓ.பி.எஸ்
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ளத்தடுப்பு அணை
நில ஆதாரங்களை முறையாக, திறம்பட மாநில நலப் பயன்பட்டுக் கொள்கை
உணவு மானியத்துக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது
வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி நிதி
கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள். சிதம்பரம் வட்டாரம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும். பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்.
ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி திட்டம்
ரூ. 2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி மிக உய்ய சூரிய பூங்கா திட்டம் உருவாக்கப்படும்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்
சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு தமிழக அரசு ரூ.40,941 கோடி நிர்வாக அனுமதி அளித்து உள்ளது.