தமிழக பட்ஜெட் 2020-21 : முக்கிய அறிவிப்புகள்
2021ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக அதிமுக அரசு தாக்கல் செய்யும் முழுபட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்
தமிழகத்தின் மொத்த வருவாய் – 2,19,375 கோடி.
தமிழகத்தின் மொத்த செலவு – 2, 41, 601 கோடி
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை – 22, 225 கோடி.
* வேளாண்துறைக்கு ரூ. 11,894 கோடி ஒதுக்கீடு!
* சிறு குறு தொழிலுக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு!
* . ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு. ஸ்மார்ட் குடும்ப அட்டை வைத்திருப்போர் மாநிலத்தின் எந்தவொரு நியாய விலை கடையிலும் தங்களுக்குரிய பொருட்களை வாங்கிக்கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
* கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் பழுதுபார்த்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதியுதவி ரூ.5 கோடியாக அதிகரிப்பு
* திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்படும்.
* நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.15 கோடி
* பேரிடர் மேலாண்மைக்காக ரூ.1360.11 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு
* 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* தமிழ்நாட்டில் மாணவர் ஆசிரியர் விகிதம் கட்டாயக் கல்விச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தைக் காட்டிலும் போதுமான அளவில் உள்ளது.
* அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.520.13 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* உயர் கல்வித்துறைக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
* அரசு ஊழியர்களின் ஊதிய செலவுகளுக்காக 2020-21 நிதியாண்டில் ரூ.64,208 கோடி ஒதுக்கீடு
* பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு 13 இடங்களில் விடுதி கட்டப்படும்
* கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம். 75 ஆண்டை நிறைவு செய்வதால் தரம் உயர்த்த நடவடிக்கை.
* சென்னையில் கூவம் மற்றும் அடையாறு நதிகளை சீரமைக்க ரூ.5439 கோடி ஒதுக்கீடு
* காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் எடுக்க பட்ஜெட்டில் ரூ.700 கோடி ஒதுக்கீடு