தமிழக பள்ளிகளுக்கு மேலும் 4 நாட்கள் விடுமுறையா?

தமிழக பள்ளிகளுக்கு மேலும் நாட்கள் விடுமுறையா?

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜனவரி 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பள்ளிகளில் நடைபெறவுள்ளதாலும்ம் வாக்குகள் எண்ணும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாலும், ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு சீட்டு முறையில் நடைபெற்று உள்ளதால் இரண்டாவது ஜனவரி 4 ஆம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை முடியும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பள்ளிகளுக்கு மேலும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

அதுமட்டுமன்று ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்கள் சனி ஞாயிறு என்பதால் ஜனவரி 6ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அரையாண்டு தேர்வு முடிவு ஜனவரி 2ம் தேதி திறக்க வேண்டிய பள்ளி ஜனவரி 6ஆம் தேதி தான் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவதால் மேலும் 4 நாட்கள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply