தமிழக பாஜக தலைவர் இவரா? பெரும் பரபரப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள மாநில தலைவர் பதவிக்கு, தீபாவளி பண்டிகைக்குள், புது தலைவர் நியமிக்கப்பட உள்ளதாகவும், புதிய தலைவர் நடுத்தர வயது மற்றும் தி.மு.க., – அ.தி.மு.க., ஆதரவு முத்திரை குத்தப்படாமல், இரு திராவிட கட்சிகளையும் கடுமையாக விமர்சிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் பாஜக டெல்லி வட்டாரங்கள் ஆலோசனை செய்து வருகின்றதாம்
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு, கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம் ஆகியோர் பெயர்கள் கொண்ட நான்கு பேர் பட்டியல், பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் பரிசீலனைக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தாலும் கே.டி.ராகவன் தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது
போராட்டங்களை முன்னெடுத்து செல்லக் கூடியவர், தமிழகத்தில் கட்சியை வளர்க்க சரியான நபர் இவரே என பாஜக தலைமை கருதுவதாக தகவல்