தமிழக முதல்வராக பதவியேற்றார் முக ஸ்டாலின்: துர்கா ஸ்டாலின் ஆனந்தக்கண்ணீர்!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி மிக அபாரமாக வெற்றி பெற்றது

இதனை அடுத்து இன்று காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்

இந்த நிலையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற போது அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன

முக ஸ்டாலினை அடுத்து துரைமுருகன் பொன்முடி உட்பட அமைச்சர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply