தமிழக முதல்வரின் லண்டன் ஒப்பந்தம்: டாக்டர் ராம்தாஸ் பாராட்டு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று லண்டனுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்தபோது அங்குள்ள உலகப்புகழ் பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் சிறப்பு வாய்ந்தது என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய டாக்டர் ராம்தாஸ், ‘உலகப்புகழ் பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாகியிருப்பது பாராட்டத்தக்கது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! என்று தெரிவித்துள்ளார்.
உலகப்புகழ் பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தம் @CMOTamilNadu எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாகியிருப்பது பாராட்டத்தக்கது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் பயனுள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
— Dr S RAMADOSS (@drramadoss) August 30, 2019