தமிழத்திற்கு ஆளுனர் வியாதி பரவிவிட்டது: புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவையில் கடந்த சில மாதங்களாகவே மாநில அரசின் அதிகார வரம்பில் துணைநிலை ஆளுனர் தலையிடுவதாக முதல்வர் நாராயணசாமி புகார் கூறி வருகிறார். இதனால் அம்மாநிலத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கோவையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏகள் இன்றி அதிகாரிகளுடன் தமிழக் ஆளுனர் பன்வாரிலால் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர், எஸ்பி, மாநகராட்சி ஆணையர் உள்பட உயரதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் அலசப்பட்டதாக கூறப்பட்டது
இந்த நிலையில் இந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி, ‘ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் அவர்களுடைய அதிகாரத்திற்குட்பட்டு தான் செயல்பட வேண்டும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிடும் வியாதி தமிழகத்துக்கும் பரவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.