தமிழர்களின் கடைசி நம்பிக்கை கருணாநிதி: நாஞ்சில் சம்பத்

தமிழர்களின் கடைசி நம்பிக்கை கருணாநிதி: நாஞ்சில் சம்பத்

அச்சம் நீங்கிய தமிழினத்தின் ஆணிவேர், மிச்சமிருந்த தமிழர்களின் கடைசி நம்பிக்கை, கவியரசனாகவும், புவியரசனாகவும் ஒரே நேரத்தில் ஜொலித்த கருணாநிதி அவர்கள் நலிவுற்றார் என்ற செய்தி கேட்டு கண்ணுறக்கம் கொள்ளவில்லை.

ஈரோட்டு குருகுலத்தில் கல்வி பயின்றவர், அண்ணா ஆராதித்த தம்பியான கருணாநிதி நலிவுற்று இருக்கின்றார் என்ற செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கின்றேன். என் சிறுவயது முதலே என்னை கவர்ந்த தலைவர் அசைவற்று இருப்பதை பார்த்து தாங்க முடியவில்லை. 1986 கோவை மாநாட்டில் என்னை அறிமுகம் செய்தார் கருணாநிதி. என்னுடைய திருமணத்தையும் நடத்தி வைத்தவர் டாக்டர் கலைஞர்1989 ஆம் ஆண்டு தேர்தலில் விடிய விடிய தேர்தல் பிரச்சாரம் செய்த என்னை உச்சிமுகர்ந்து பாராட்டியவர் டாக்டர் கலைஞர்

கருணாநிதியின் நிழலில் வளர்ந்த என்னால், அவர் அசைவற்று படுத்திருப்பதை பார்த்து தாங்கமுடியவில்லை என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கடந்த இரண்டு தினங்களாக தூக்கமில்லை. டாக்டர் கலைஞர் அவர்கள் மீண்டும் சிங்கம் போன்று எழுந்து வரவேண்டும் என்று காலமகளை நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்ததாகவும், அவருடைய உடல்நிலை சீராகி வருவதாகவும் அவர் கூறியதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

Leave a Reply