தமிழர் தலைமையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட செயற்கைகோள்

தமிழர் தலைமையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட செயற்கைகோள்

இஸ்ரோ தலைவராக சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் அவர்கள் பொறுப்பேற்ற நிலையில் அவருடைய தலைமையில் நேற்று புதிய செயற்கைக்கோள் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைக் கோளான, ஜிசாட்-6ஏ நேற்று மாலை 4.56-க்கு விண்ணில் செலுத்தப்பட்டது. பின்னர் ராக்கெட்டில் இருந்து பிரிந்த செயற்கைகோள் வெற்றிகரமாக புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக் கோள் தொலை தொடர்பு சேவைக்கு பெரிதும் உதவும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் ஆகும். ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் இந்தியாவின் 12-வது ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும். முன்னதாக, ஜிசாட் 6 தொலைதொடர்பு செயற்கைக் கோள் 2015 ஆகஸ்ட் 27-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றதும், தமிழரின் தலைமையில் ஒரு செயற்கைக்கொள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply