தமிழில் இமெயில் முகவரி. மும்பை நிறுவனம் செய்த உலக சாதனை

தமிழில் இமெயில் முகவரி. மும்பை நிறுவனம் செய்த உலக சாதனை

emailதற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இமெயில் முகவரி அமைக்கும் வசதி உள்ள நிலையில் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தமிழ் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் இ-மெயிலை முகவரியை உருவாக்கி கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த டேட்டா எக்ஸ்ஜேன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் இமெயிலை ஆங்கில மொழி மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் கொண்டு வந்தால் என்ன்? என்று வித்தியாசமாக யோசித்ததன் விளைவாக இந்த புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. அதன்படி உலகிலேயே முதன் முறையாக இ-மெயிலில் ஒரே நேரத்தில் தமிழ் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் இ-மெயில் அனுப்ப முடியும். மேலும் இந்த சேவை எவ்வித கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டமாக இந்த சேவை தமிழ், இந்தி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய 8 மொழிகளில் இ-மெயில் முகவரிகளை உருவாக்கி கொள்ளவும் வழி செய்கிறது. மேலும் இந்த சேவைக்கு ‘டேட்டா மெயில்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் தவிர அரபி, ரஷ்யா மற்றும் சீனம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் இந்த மின்னஞ்சல் சேவை வழங்கப்படுகிறது

Leave a Reply