தமிழில் இல்லாத வார்த்தையும் ஆங்கிலத்தில் இல்லாத வார்த்தையும்!
ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கும் தமிழில் அதே அர்த்தம் பொருந்திய வார்த்தைகள் இருக்கும் என்பதே தமிழறிஞர்களின் வாதம் ஆக இருந்து வருகிறது. ஏனெனில் தமிழ் முதன்மையான, முதுமையான மொழி என்பதால் அந்த மொழியில் இல்லாத வார்த்தைகளே இல்லை என்பதுதான் அவர்களின் வாதம்
இந்த நிலையில் ஆங்கிலத்தில் டேட்டிங் என்ற வார்த்தைக்கு இணையாக தமிழில் வார்த்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் விளக்கம் அளித்தபோது ’தமிழில் டேட்டிங் என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை இல்லாதது உண்மைதான். ஏனெனில் டேட்டிங் கலாசாரம் தமிழகத்தில் இல்லை என்பதால் அந்த வார்த்தை இல்லாமல் உள்ளது என்று கூறிவருகின்றனர்.
தமிழில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள எந்த மொழியிலும் டேட்டிங் என்ற வார்த்தைக்கு இணையான வார்த்தை கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்
அதேபோல் தமிழர்கள் பாவம் எது, புண்ணியம் ஏது என்று பகுத்தறிந்து வாழ்ந்தார்கள் என்றும் பாவம் என்பதற்கு ஆங்கிலத்தில் SIN என்ற வார்த்தை இருப்பதாகவும் ஆனால் புண்ணியம் என்ற வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் ஆங்கில கலாச்சாரத்தில் புண்ணியம் என்ற ஒன்றே இல்லை என்பதால் அவர்களுடைய மொழியிலும் அந்த வார்த்தை இல்லை என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்