தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளதா? ஐகோர்ட் நீதிபதி அதிரடி கேள்வி!

தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளதா? ஐகோர்ட் நீதிபதி அதிரடி கேள்வி!

தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகளை 10 ஆண்டுக்கு மேலாக மத்திய அரசு வெளியிடாமல் வைத்துள்ளது. இதுகுறித்து தமிழகத்தில் இருந்து பலமுறை கோரிக்கைகள் எழுப்பியும் எந்த மத்திய அரசும் செவிசாய்க்கவில்லை

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வந்தது. அப்போது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவுகளை 10 ஆண்டுக்கு மேலாக வெளியிடாதது ஏன்? என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி

அகழ்வாராய்ச்சி முடிவுகளை வெளியிடாத தொல்லியல்துறை செயல் கண்டிக்கத்தக்கது என்றும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளதா? என்ற ஐயம் ஏற்படுவதாகவும் ஐகோர்ட் நீதிபதி அதிரடி கேள்வி ஒன்றை எழுப்பினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply