தமிழ்நாடு காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

தமிழ்நாடு காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்புத் துறையில் தீயணைப்பு வீரர் என 15,664 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணிகளுக்குக்கான எழுத்துத் தேர்வை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 21-ம் தேதி நடத்தியது. 32 மாவட்டங்களில் 410 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 5.5 லட்சம் பேர் எழுதினர்.

இந்த நிலையில் இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று tnusrb.tn.gov.in , tnusrbonline.org என்ற இணையதளங்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணையதளங்களில் ரோல் நம்பரை பதிவு செய்து தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்

Leave a Reply