தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு

corona virus

தமிழ்நாட்டில் புதிதாக 1,891 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒரே நாளில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 440 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 423 பேர் குணமடைந்துள்ளனர். இன்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் புதிதாக 138 பேருக்கும்,கோவையில் 183 பேருக்கும் செங்கல்பட்டில் 102 பேருக்கும் ஈரோட்டில் 141 பேருக்கும் சேலத்தில் 119 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.