தமிழ்நாட்டில் ‘பெரியார்’, ஆந்திராவில் ‘ராமசாமி நாயக்கர்’: இதுதான் ஜாதி ஒழிப்பா?
தமிழகத்தை பெரியார் மண் என்று திராவிட கட்சிகள் கூறி வரும் நிலையில் சத்யராஜ் நடித்த ‘பெரியார்’ என்ற திரைப்படத்தை தெலுங்கில் டப் செய்து ‘பெரியார் ராமசாமி நாயக்கர்’ என்ற பெயரில் வெளியிட்டதை சமூக வலைத்தள பயனாளிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பெரியார் என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட்டவர்கள், அதே திரைப்படத்திற்கு ஆந்திராவில் ராமசாமி நாயக்கர் என்று சாதி அடையாளத்துடன் பெயர் வைத்து வெளியிட என்ன காரணம் என்றும், சாதி ஒழிப்பு பேசும் பெரியாரிஸ்ட்டுகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் டுவிட்டர் பயனாளி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விக்கு பெரியாரிஸ்ட்டுகள் உரிய பதிலை அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்