தமிழ்நாட்டுல காடே இல்லையான்னு கேள்வி கேட்டவங்க எல்லாம் எங்கே போனீர்கள்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற டிஸ்கவரி சேனலின் டாக்குமென்ட்ரி திரைப்படத்திற்கு கர்நாடகா காட்டில் படப்பிடிப்பு நடத்திய போது தமிழகத்தில் காடே இல்லையா என்ற கேள்வி கேட்ட நெட்டிசன்கள், தற்போது திமுக வட இந்திய நிறுவனத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது ஒரு கேள்வி கேட்காதது ஏன் என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
ஒரு டிஸ்கவரி நிகழ்ச்சிக்கு காட்டுக்கு சென்றபோது தமிழ்நாட்டில் காடு இல்லையா என்று கேட்ட அறிவுஜீவிகள் தேர்தலில் வெற்றிபெற ஒரு வட இந்திய நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கும் திமுகவை பார்த்து கேள்வி கேட்காதது ஏன் என ஒரு ரஜினி ரசிகர் டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்
இந்த கேள்விக்கு இனியாவது திமுகவினர் பதில் சொல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்