தமிழ் தலைவாஸ் அணிக்கு 4வது தோல்வி: விரக்தியில் ரசிகர்கள்
2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி போட்டி தொடர் சமீபத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியிலும் பெங்கால் அணியிடம் தோல்வி அடைந்து, தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ளது.
நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 27-36 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியிலும் ரம்பம் முதலே புள்ளிகளில் பின்வாங்கியே தமிழ் தலைவாஸ் அணி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தலைவாஸ் அணியின் தொடர் தோல்வியால் கபடி ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். இனிவரும் போட்டிகளிலாவது சுதாரிப்புடன் ஆடி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.