தமிழ் மொழியில் திருமலை-திருப்பதி இணையதளம் தொடக்கம்

தமிழ் மொழியில் திருமலை-திருப்பதி இணையதளம் தொடக்கம்

திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பல்வேறு சேவைகளை தேவஸ்தானம் வழங்கி வந்தது. ஆங்கிலம் தெரியாத பல பக்தர்கள் தேவஸ்தானத்தின் பல்வேறு சேவைகளை பெற, அந்தந்த மாநிலங்களில் மக்கள் பேசும் மொழியில் இணையதள சேவையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி நடந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், தெலுங்கு மொழியில் இணையதள சேவை தொடங்கப்பட்டது. அதனை, முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு தொடங்கிவைத்தார். அதேபோல், கடந்த 1-ந் தேதி கன்னட மொழியில் இணையதள சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தமிழ் மொழியில் திருப்பதி தேவஸ்தான இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதனை, திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில், முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தொடங்கிவைத்தார்.

Leave a Reply