“தயாரா இருங்க”- 20,000 மத்திய அரசு வேலைக்கான அறிவிப்பு விரைவில்..!

“தயாரா இருங்க”- 20,000 மத்திய அரசு வேலைக்கான அறிவிப்பு விரைவில்..!

விரைவில் சுமார் 20,000 மத்திய அரசு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம், பெரும்பாலான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பில் வருவாய்த்துறை, ரெயில்வே,சி.பி.ஐ போன்ற பல மத்திய அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் மொத்தம் எத்தனை பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது? என்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த எஸ்.எஸ்.சி தேர்வு நடத்தப்பட இருப்பதால், சுமார் 20,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் நடைபெறும் என தெரிகிறது.

வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி:

எஸ்.எஸ்.சி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். சில பணிகளுக்கு இந்த வயது விகிதம் அதிகரிக்கலாம். ஓ.பி.சி, எம்.பி.சி மற்றும் எஸ்.சி ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

பெரும்பாலான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக உள்ளது. சில பணியிடங்களுக்கு கல்வித் தகுதி குறையலாம்.

கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:

இந்த தேர்வுக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தேர்வுகளுக்கு இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். www.ssc.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் குறித்த அனைத்து விபரங்களும் இதே இணையதளத்தில் கிடைக்கும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-6-2017

SSC exam notification for 20,000 vacancies released

Leave a Reply