தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: 3 பேர் விடுதலை
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 3 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில் சற்றுமுன் அந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2000ஆம் ஆண்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழக்கு ஒன்றில் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அப்போது எரிக்கப்பட்ட ஒரு பேருந்தில் பயணம் செய்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலியாகினர்.
இந்த நிலையில் மூன்று குற்றவாளிகளும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டதாகவும் மூவரும் வேலூர் சிறையில் இருந்து ரகசியமாக ஆட்டோவில் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.