தர்பார் செகண்ட்லுக்: தரமான சம்பவம், வெறித்தனம் என விமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் செகண்ட்லுக் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த லுக்கை பார்த்த ரஜினி ரசிகர்க்ள் தரமான சம்பவம், வெறித்தனம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த செகண்ட்லுக்கில் இந்த படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் ஜனவரி 14ஆம் தேதி ‘தர்பார்’ திரைக்கு வரும் என்பது உறுதியாகிவிட்டது.
இந்த செகண்ட்லுக்கில் இருந்து இதுவொரு முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பது தெரிகிறது. மேலும் ரஜினி இளமைத்தோற்றத்தில் தான் பெரும்பாலான காட்சிகளில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது
அனிருத் இசையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.