தர்ஷ் மச்சானுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அபிராமி!
இன்று தர்ஷனின் பிறந்த நாளை அடுத்து அவருக்கு ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான அபிராமி தர்ஷனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியவதாவது: ‘இன்று தர்ஷனின் பிறந்த நாள். அவருக்கு வெற்றி கிடைக்க எனது வாழ்த்துக்கள். தர்ஷ் மச்சான் உனக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ இவ்வாறு அபிராமி தெரிவித்துள்ளார்.