நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, தற்கொலைகளை அரசு ஊக்குவிப்பது போல உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
நீதிபதிகள், நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் அந்த தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளது
மேலும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு அனுமதியும் வழங்கி உள்ளனர்.