தலைகீழாக இருக்கும் விக்ரம் லேண்டர்! செயல்படுவது சாத்தியமா?

தலைகீழாக இருக்கும் விக்ரம் லேண்டர்! செயல்படுவது சாத்தியமா?

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்கினாலும் இன்னும் தரைக்கட்டுப்பாட்டிற்கு தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. இஸ்ரோ தனது 32 மீ ஆண்டெனாவில் இருந்து சிக்னல்களை அனுப்பிக்கொண்டே இருக்கின்றது. அதேபோல் நாசாவின் 60 மீ ஆண்டெனாவும் விக்ரம் லேண்டருக்கு பலவிதமான சிக்னல்களை அனுப்பியுள்ளது. இதுவரை எந்த சிக்னல்களுக்கும் விக்ரம் லேண்டரிடம் இருந்து பதில் இல்லை

இந்த நிலையில் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டர் நிலவில் தலைகீழாக இருப்பதாகவும், இதனால் விக்ரம் லேண்டரை செயல்பட வைக்கும் வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஏதாவது அதிசயம் நடந்து விக்ரம் லேண்டர் செயல்பாட்டுக்கு வந்துவிடாதா? என கோடிக்கணக்கான இந்தியர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மேலும் சந்திரனின் இன்னும் ஒரு வாரம் மட்டுமே சூரிய ஒளி இருக்கும். அதன்பின் 14 நாட்கள் இருளும் கடுமையான குளிரும் இருக்கும் என்பதால் விக்ரம் லேண்டர் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply