தலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா? நீதிமன்றம் கண்டனம்

தலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா? நீதிமன்றம் கண்டனம்

பீகார் மாநில முன்னாள் அமைச்சர் மஞ்சுவெர்மா என்பவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறிய போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பெண்களுக்கான அரசுக் காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர்களில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டு, காப்பக வளாகத்திலேயே புதைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த புகார் குறித்த வழக்கில் பிகார் மாநில முன்னாள் அமைச்சர் மஞ்சு வெர்மாவின் கணவர் சந்ரேஷ்வர் பெயர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மஞ்சு வெர்மாவை கடந்த ஒரு மாதமாகவே காணவில்லை என்றும் அவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் போலீசார் இந்த வழக்கின் விசாரணையின்போது தெரிவித்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி ‘முன்னாள் கேபினட் அமைச்சர் தப்பி ஓடிவிட்டார் என்று கூறுவது அற்புதம்’ என்று கூறினார். மேலும், “கேபினெட் அமைச்சராக இருந்தவர் தலைமறைவாகிவிட்டார் என்பது அவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்றும் சொல்கிறீர்கள். இது எப்படி நடக்க முடியும்? அமைச்சரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற விஷயத்தின் தீவிரத்தை புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார்.

 

Leave a Reply