தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்படுவதைத் தடுக்க கூண்டு அமைப்பது சரியான முடிவு அல்ல என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
மேலும் கூண்டுக்குள் அடைத்து தலைவர்களைக் குற்றவாளிபோல் காட்டவேண்டாம் எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெரியார் உள்பட தலைவர்கள் சிலைகள் மீது அவமதிப்பு தொடர்ந்து வருவது குறித்து வருத்தம் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இவ்வாறு கூறினார்.