‘தலைவா’ ஸ்டைலில் உருவாகும் விஜய்சேதுபதி-அமலாபால் படம்!
விஜய், அமலாபால் நடித்த ‘தலைவா’ திரைப்படத்தில் இருவருமே டான்ஸ் கலைஞர்கள் கேரக்டரில் நடித்திருப்பார்கள். டான்ஸ் பிராக்டீஸ் செய்யும்போது அவர்களுக்குள் ஏற்படும் காதல் தான் இந்த படத்தின் கதையின் ஒரு பகுதி
அதேபோல் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஜய்சேதுபதியும், அமலாபாலும் இசைக்கலைஞர்கள் கேரக்டரில் நடிக்கவுள்ளனர். இசையின் மீது இருவருக்கும் காதல் இருக்கும் நிலையில் இந்த இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது எப்படி என்பதுதான் இந்த படத்தின் கதை ஆகும். இந்த படம் விஜய்சேதுபதிக்கு இன்னொரு ’96’ படமாக இருக்கும் என கருதப்படுகிறது
வெங்கடகிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு
பழனியில் தொடங்கியுள்ளது. இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் இசக்கிதுரை தயாரிக்கவுள்ளார்.