தளபதி 63 அப்டேட்: டுவிட்டரை தெறிக்க வைக்க விஜய் ரசிகர்கள் திட்டம்
இன்று மாலை ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் வரவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதால் இந்த அப்டேட்டை வரவேற்க விஜய் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.
மேலும் விஜய் ரசிகர்கள் இன்று மாலை 6 மணி முதல் டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களை தெறிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து வெளியாவதால் ரசிகர்கள் வெறித்தனமாக அப்டேட்டிற்காக காத்திருக்கின்றனர்.
#Thalapathy63 update today at 6:00pm Start waiting 😎😎😎 pic.twitter.com/lznC4vjG9g
— Archana Kalpathi (@archanakalpathi) June 18, 2019