‘தளபதி 63’ படத்தில் பாலிவுட் பிரபலம்
விஜய், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லன் கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
ஷாக்கி ஷெராப் ஏற்கனவே தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘ஆரண்ய காண்டம்’, சி.வி.குமார் இயக்கிய ‘மாயவன்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்கி ஷெராப் ‘தளபதி 63’ படத்தில் மெயின் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும், அவர் இணைந்ததால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது
We are happy to welcome #JackieShroff Sir on board #Thalapathy63 😊 pic.twitter.com/S4M67WZ9RP
— Archana Kalpathi (@archanakalpathi) March 21, 2019