சம்பளம் இல்லை என்பதால் பரிதாபம்
டெல்லியில் சர்வோதயா பால வித்யாலயா என்ற பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து சம்பளம் வராததால் வேறு வழியின்றி தனது
குடும்பத்தை காப்பாற்ற தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்
டெல்லியில் சர்வோதயா பால வித்யாலயா என்ற பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் வாஷிர் சிங் என்பவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் கடந்த சில மாதங்களாக சம்பளம்
வரவில்லை என்று கூறியுள்ளார்
எனவே வீட்டுவாடகை மற்றும் குடும்பச் செலவுக்காக வேறு வழியின்றி தற்போது தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
ஆங்கில ஆசிரியர் ஒருவர் தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வீதி வீதியாக காய்கறி வியாபாரம் செய்து வருவது அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது