தவளக்குப்பம் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்
தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கப்படுகிறது.
புதுச்சேரி உயர்கல்விக் கழகத்தால் நடத்தப்படும் தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இஅடஅநஇ மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. இக்கல்லூரியில் பிகாம், பிபிஏ, பிஎஸ்சி, பிசிஏ, ஆகிய பட்டப்படிப்பு வகுப்புகளில் சேர்ந்திருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கப்படுகிறது. அப்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் தனது பெற்றோர்களுடன் வரவேண்டும் என்று கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.