தவான், தினேஷ் கார்த்திக் அதிரடியால் இந்தியா வெற்றி
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற சமநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களை எடுத்தது. 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 46 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது,.
தவான் அதிரடியாக 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 64 ரன்களும் எடுத்தனர்.