தாகத்தை போக்க 8 டீஜ் ஏஜ் இளைஞர்கள் செய்த சாதனை
கோடை வெயிலில் தாகம் தவிர்க்க முடியாத ஒன்று. தாகத்தை தவிர்ப்பவர்கள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுவர்.
இந்த நிலையில் 8 டீன் ஏஜ் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு ரோபோட்டை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோட் 50 தண்ணீர் பாட்டில்களை சுமந்து சென்று பாதசாரிகளின் தாகத்தை தீர்க்கின்றது.
எல்.இ.டி கண்களும், இனிமையான குரலும் கொண்ட இந்த ரோபோட்டை இதனை கண்டுபிடித்த இளைஞர்கள் பிசியான ஒரு பகுதியில் அமர்ந்து ஆண்ட்ராய்டு ஆப் மூலம் இயக்குகின்றனர். தாகம் உள்ளவர்களை தேடி இந்த ரோபோட் குளுமையான தண்ணீர் பாட்டில்களை வழங்குகின்றது. இந்த டீன் ஏஜ் இளைஞர்களுக்கு மும்பை பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது