தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுனரின் வீட்டில் தமிழிசை
நேற்று தமிழக க்பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பேட்டி அளித்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு ஆட்டோ டிரைவர் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது, அதுக்கு என்ன பதில் என்று கேள்வி கேட்டார்.
அப்போது ஒரு பாஜக தொண்டர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். அதன்பின் அவர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தமிழிசை இதனை மறுத்தார்.
இந்த நிலையில் சென்னையில் பாஜகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்கு இன்று நேரில் சென்ற தமிழிசை சவுந்தரராஜன் அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் ஆட்டோ டிரைவருக்கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.