தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க 3 மணி நேரம் மட்டுமே அனுமதி: சுற்றுலா பயணிகள் அதிருப்தி
உலகின் எட்டு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு. சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் சமீபத்தில் தாஜ்மஹாலின் நுழைவுக்கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.250ஆக உயர்த்தப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கு ரூ.1300ஆக உயர்த்தப்பட்டது
இந்த நிலையில் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க இனிமேல் 3 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு மேல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய தொல்லியல் ஆய்வகம் அறிவித்துள்ளது,
அதேபொல் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நுழைவு நேரத்துக்கு பதிலாக சுற்றுலா பயணிகள் தாமதமாக வந்தால் அனுமதி மறுக்கப்படும் என்றும், புதிய நுழைவுச் சீட்டு வாங்கிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.