தாஜ்மஹால் நெக்ஸ்ட், மாமல்லபுரம் ஃபர்ஸ்ட்
சீன அதிபர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார் என்ற செய்தி வெளியானவுடன் சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு டெல்லி அல்லது தாஜ்மஹால் ஆகிய இரு இடங்களில் ஒன்றில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இந்த சந்திப்பில் மகாபலிபுரத்தில் நடைபெறும் என மத்திய அரசு முடிவு செய்தது. இதனை சீன அதிபரும் ஏற்றுக் கொண்டதால் இந்த சந்திப்புக்கு மகாபலிபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது
சீன அதிபர் மகாபலிபுரம் வருகையை அடுத்து மகாபலிபுரம் பகுதியில் ஒரு மக்களுக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் நாளை உலக அரங்கில் மகாபலிபுரம் ஒரு பேசப்படும் நகரமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ள முக்கிய மீடியாக்கள் தற்போது மகாபலிபுரத்தில் குவித்துள்ளது. இதுவரை மகாபலிபுரம் என்ற ஒரு பழங்கால நகரம் இருப்பதே தெரிந்திராத உலக மக்கள் தற்போது மகாபலிபுரத்தை கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டனர்
பழங்கால பல்லவர்களின் பெருமைகளைக் கூறும் கடற்கரை கோவில் உட்பட பல சிற்பங்கள் இங்குதான் செய்யப்படுகின்ற என்ற உண்மை தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது
இந்தியாவில் ஒரு பெருமைக்குரிய பழங்கால நகரத்தை சீன அதிபரின் வருகையால் தான் உலக மக்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இனி இந்தியாவிற்கு சுற்றுபயணம் செய்ய வருபவர்கள் தாஜ்மஹாலை இரண்டாவதாக பார்த்துக்கொள்ளலாம் முதலில் மகாபலிபுரம் செல்வோம் என்று தான் நினைப்பார்கள் என்று சுற்றுலா துறையினர் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு மகாபலிபுரம் ஒரு முக்கியத்துவமான பகுதியாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது