தாய்ப்பாலை எவ்வளவு நாட்களுக்கு சேமித்து வைக்கலாம்?

தாய்ப்பாலை எவ்வளவு நாட்களுக்கு சேமித்து வைக்கலாம்?

குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் முக்கியம். சில தாய்மார்களுக்கு 3 அல்லது 6 மாதத்திலே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கலாம். அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும் கவலை இருக்கும். இவர்கள் தாய்ப்பாலை சேமித்து வைத்துக்கொள்ள உதவும் கருவியே பிரெஸ்ட் பம்ப்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் சேமித்து வைக்க உதவும். தாய் மட்டுமே அருகில் இருந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலை மாறி, தாயானவள் தாய்ப்பால் சேகரித்து வைத்து விட்டால் தந்தையோ மற்ற பெரியவர்களோ தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்க்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும்.

ஃபிரிட்ஜ் இல்லாதவர்கள், வெளியில் தாய்ப்பாலை வைக்க நினைக்கும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது….

தாய்ப்பாலை உங்களது கையின் மூலமாகவோ, மேனுவல் பிரெஸ்ட் பம்ப் அல்லது எலக்டிரிக் பிரெஸ்ட் பம்ப் மூலமாகவோ தாய்ப்பாலை சேமித்து வைத்தால் 1-2 மணி நேரம் வரைதான் கெடாமல் இருக்கும். உங்களது ரூம் வெப்பநிலைப்படி 1-2 மணி நேரம் வரைதான் தாய்ப்பாலை வெளியில் வைத்து இருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் சேகரிக்க நினைக்கிறீர்கள் என்றாலோ அடுத்த நாளுக்கு தாய்ப்பால் சேகரிக்க வேண்டுமென்றாலோ நீங்கள் சேமித்து வைத்த தாய்ப்பாலை ஃபிரிட்ஜில் வைக்கலாம். இரண்டு நாள் வரை தாய்ப்பால் கெடாமல் இருக்கும்.

ஒரு வாரம் நீங்கள் எதாவது அலுவல் ரீதியாக குழந்தையை விட்டு வெளியே செல்லுவதாக இருந்தால், சேமிக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் வைக்க வேண்டும். ஃப்ரீசரில் வைக்கின்ற தாய்ப்பாலை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

10 நாட்களுக்கு மேல் ஃப்ரீசரில் வைத்திருக்கும் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதைத் தவிர்ப்பதே நல்லது

Leave a Reply