தாய்மையின் பவர் இதுதான்:
தாய்மையின் பவர் , சக்தி குறித்து உலகெங்கும் பல சம்பவங்கள் மூலம் தெரிந்து கொண்டுள்ளோம்,. அந்த வகையில் இதோ தாயின் பெருமை குறித்த இன்னொரு நிகழ்வு
வடகிழக்கு பதிகுதியை சேர்ந்த இந்த தாய் சைக்கிள் ரிக்சா ஓட்டும் தொழிலை செய்து வருகிறார். இவருடைய ஒரே கைக்குழந்தையை கவனித்து கொள்ள யாரும் இல்லாததால் இவர் அந்த குழந்தையை சைக்கிள் ரிக்சா ஓட்டும்போது ஒரு துணியில் தொட்டில்போன்று கட்டி தனக்கு முன்பே வைத்துள்ளார். எந்த காரணத்தை முன்னிட்டும் அவர் குழந்தையை பின்னால் வைக்க விரும்பவில்லை
மேலும் சைக்கிள் ரிக்சாவின் ஹேண்டில்பாரில் அவர் குழந்தைக்கு தேவையான உணவு பொருட்களளயும் தயாராக வைத்துள்ளார். இதைவிட தாயின் அன்பை நிரூபிப்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா? இந்த தியாகத்தாய்க்கு ஒரு சல்யூட் அடிப்போம்