தாய்லாந்தில் பொதுத்தேர்தல்: அடுத்த பிரதமர் யார்?

தாய்லாந்தில் பொதுத்தேர்தல்: அடுத்த பிரதமர் யார்?

ராணுவ ஆட்சி நடைபெறுகிற தாய்லாந்து நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த பிரதமராக பதவியேற்பது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

500 உறுப்பினர்களை கொண்ட தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பள்ளிக்கூட வளாகங்கள், கோவில்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அமைக் கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். பொதுவான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா, முன்னாள் பிரதமர் தாக்‌ஷின் ஷினவத்ராவின் பெகு தாய் கட்சியின் சார்பில் களம் இறங்கி உள்ள சூடாரத் கீரப்பான் ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மன்னர் மகா வஜ்ரலோங்கோன் மக்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் தனது தந்தையும், முன்னாள் மன்னருமான பூமிபோல் அதுல்யாதேஜ் கூறிய “அரசுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்யக்கூடிய மற்றும் கெட்டவர்களை கட்டுப்படுத்தும் ஆளுமை கொண்ட நல்ல மனிதர்களை ஆதரியுங்கள்” என்கிற வாசகத்தை சுட்டிக்காட்டி “இதை நினைவில் வைத்து விழிப்புடன் செயல்படுங்கள்” என தெரிவித்திருந்தார். மன்னரின் இந்த அறிக்கை செய்தி சேனல்களில் தொடர்ச்சியாக காட்டப்பட்டுக்கொண்டே இருந்தன.

Leave a Reply