தாய், மனைவியை சந்தித்தார் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவ்

தாய், மனைவியை சந்தித்தார் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்த நிலையில் தற்போது அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தனது தாயார் மற்றும் மனைவியை சந்திக்க அவர் கேட்ட கோரிக்கையை பாகிஸ்தான் அரசு நிறைவேற்றியுள்ளது. நேற்று குல்பூஷன் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவி இருவரும் சந்தித்தனர்.

இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் வைத்து குல்பூ‌ஷன் ஜாதவை அவரது தாய் மற்றும் மனைவியும் சந்தி்த்தனர். இந்த சந்திப்பின் காரணமாக இஸ்லாமாபாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் தனது தாய் மற்றும் மனைவியை சந்திக்க அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு குல்பூ‌ஷன் ஜாதவ் நன்றி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply