தாவரவியல் படித்தவர்களுக்கு வாய்ப்பு
பொடானிகல் சர்வே ஆப் இந்தியா என்பது தாவரவியல் தொடர்பான சிறப்பு ஆராய்ச்சி மற்றும் நிர்வகிப்பு நிறுவனமாகும். தாவரவியல் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பணிபுரிவது பலரின் லட்சியமாக உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
பணியிடம் : மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பணிபுரிய வேண்டியிருக்கும்.
வயது : விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்.சி., படிப்பை பாட்டனி, மைக்ரோபயாலஜி அல்லது பயோ டெக்னாலஜியில் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க : தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ டேடா படிவத்துடன், சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ் நகல்கள், பட்டப் படிப்பு நகல் மற்றும் இதர இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். இந்த படிவங்களின் சாப்ட் காபியையும் இமெயில் முகவரி வாயிலாக அனுப்ப வேண்டும்.
Dr. Rashmi Dubey,
Principal Investigator & Scientist D,
Botanical Survey of India, Western Regional Centre,
PUNE 411001.
dr.rashmidubey@gmail.com
கடைசி நாள் : 09.06.2017
விபரங்களுக்கு : https://drive.google.com/file/d/0B5GWSOMuYbnbWkdIdmx3aU53cGs/view