தாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டில் தான் உள்ளார்:

முதல்முறையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக அவ்வப்போது இந்தியா ஆதாரங்களுடன் தெரிவித்து வந்தாலும் பாகிஸ்தான் அதனை ஒப்புக் கொள்ளவில்லை

கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியா பலமுறை அழுத்தம் கொடுத்த போதிலும் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்றே பாகிஸ்தான் கூறி வந்தது

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது

கராச்சி நகரிலுள்ள ஒயிட் ரைஸ் என்று அழைக்கப்படும் ஒரு கட்டத்தில் தான் அவர் வசிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply