திடீரென அணிமாறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ

திடீரென அணிமாறிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களை டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்களுடன் சந்திக்க சென்றுள்ள நிலையில் திடீரென அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதனால் தினகரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தினகரன் அணியில் உள்ள 9 எம்.எல்.ஏக்கள் முதல்வரிடம் போன் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளதாக சமீபத்தில் அமைச்சர் ஜெயகுமார் கூறிய நிலையில் அந்த ஒன்பதில் ஒருவரா இவர்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியெனில் மீதி எட்டுபேர் எப்போது வெளியே வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply