ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரைகள் திடீரென நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா என்ற பகுதியில் உள்ள பெரிய மணல் திட்டில் திடீரென நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின
270 க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிருக்கு போராடி வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது இந்த பகுதிகளில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசு எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் உயிருக்கு போராடி வரும் திமிங்கலங்களை காப்பாற்ற ஆஸ்திரேலிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் ஏற்கனவே பல திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது