திடீரென காணாமல் போன ஹீரோயின்: வலைவீசி தேடி வரும் தயாரிப்பாளர்
தமிழில் ’கட்டம் போட்ட சட்டை’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அதிதி என்ற மலையாள நடிகை ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்ட அதிதி, திடீரென கேரளா சென்று விட்டதாகவும் அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் படக்குழுவினர் புகார் அளித்துள்ளனர்
சமூக வலைதளங்கள் தொலைபேசி உள்பட அனைத்து விதங்களிலும் அதிதியை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட சங்கங்களில் புகார் அளிக்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஒரு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை திடீரென காணாமல் போய்விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது