திடீரென 30 தொதிகுகள் முன்னணி சென்ற மர்மம் என்ன? குஜராத் தேர்தல் ஆச்சரியம்

திடீரென 30 தொதிகுகள் முன்னணி சென்ற மர்மம் என்ன? குஜராத் தேர்தல் ஆச்சரியம்

குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இன்று காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் ஆனதில் இருந்தே பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி முன்னணியில் வந்தன. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் 84 இடங்களிலும் பாஜக 81 இடங்களிலும் முன்னணியில் இருந்தன. இந்த நிலையில் சுமார் இரண்டு மணி நேரங்கள் இருந்த நிலையில் தற்போது திடீரென பாஜக 105 இடங்களிலும் காங்கிரஸ் 74 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இத்தனை வருட தேர்தல் வரலாற்றில் அரைமணி நேரத்தில் எந்த ஒரு கட்சியும் திடீரென 30 இடங்களுக்கும் மேல் முன்னிலை வகித்ததாக தெரியவில்லை. குறிப்பாக இழுபறியில் உள்ள நிலையில் திடீரென இவ்வளவு தொகுதிகள் முன்னிலை வகிக்க வாய்ப்பே இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக 38 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

Leave a Reply