தினகரனுக்கு சிக்கல் கொடுக்க களமிறங்கிய 3 பொன்னுத்தாய்கள்

தினகரனுக்கு சிக்கல் கொடுக்க களமிறங்கிய 3 பொன்னுத்தாய்கள்

தென்காசி மக்களவை தொகுதியில் அமமுக வேட்பாளராக சு.பொன்னுத்தாய் என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அமமுக வேட்பாளரை குழப்புவதற்காகவே சுயேச்சை வேட்பாளர்களாக 3 பொன்னுத்தாய்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய் கூறும்போது, எங்கள் சின்னம் பரிசுப் பெட்டகம் என்று தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால், என்னுடைய பெயரில் மேலும் 3 பொன்னுத்தாய்களை நிறுத்தி உள்ளனர். இந்த தொகுதியில் திமுகவுக்கும் எனக்கும்தான் நேரடிப் போட்டி உள்ளது. அதனால் இப்படி குறுக்கு வழியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி பரிசுப் பெட்டகம் வெற்றி பெரும் என்றார்.

இந்த தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்திலும், திமுக வேட்பாளராக தனுஷ் எம்.குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர்

Leave a Reply