தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் அதிரடியாக புகுந்த தமிழக போலீசார்
இன்று அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியதை அடுத்து ஆட்சியை கவிழ்க்க முயற்சியை ஆரம்பித்துவிட்டதாக தினகரன் கூறினார். இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் சொகுசு ரிசார்ட்டில் தமிழக போலீசார் அதிரடியாக புகுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் பெங்களூரு அருகேயுள்ள குடகில் என்ற தனியார் சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உண்மையிலேயே தினகரனுக்கு ஆதரவு தரும் வகையில் தங்கியுள்ளார்களா? அல்லது சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை செய்ய சற்று முன்னர் தமிழக போலீசார் ‛மப்டி’யில் கோவை பதிவெண் கொண்ட வாகனங்களில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டிற்கு சென்றனர்.
அங்கு சென்ற பின் போலீஸ் உடைக்கு மாறிய அவர்கள் ரிசார்ட்டுக்குள் சென்று எம்.எல்.ஏக்களை விசாரித்து வருவதாகவும், ஒருவேளை கட்டாயத்தின் பேரில் தங்கியிருந்தால் அவர்கள் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.