தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு: ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை
மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
தினகரன் அலுவலகத்திற்கு தீ வைத்த வழக்கில் அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் அதிரடி தீர்ப்பளித்துள்ள நிலையில் இன்று ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமிற்கு 5 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மார்ச் 25ஆம் தேதி ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராம் ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது