தினகரன் முன்னிலையில் வாக்காளருக்கு பணம் கொடுத்த வெற்றிவேல்: வீடியோவால் பரபரப்பு

தினகரன் முன்னிலையில் வாக்காளருக்கு பணம் கொடுத்த வெற்றிவேல்: வீடியோவால் பரபரப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது அவரது முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் ஒரு வேட்பாளருக்கு பணம் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த தண்டையார்ப்பேட்டையில் நேற்று தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு குழந்தையை கொஞ்சிய அவர் அந்த குழந்தையை பெற்றோரிடம் திருப்பி கொடுக்கும்போது அவர் அருகில் நின்றிருந்த வெற்றிவேல், அந்த குழந்தையின் பெற்றோருக்கு பணம் கொடுத்தார்.

இந்த காட்சியின் வீடியோவை செய்திச்சேனல் ஒன்று வெளியிட்டு பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகரில் பிரதான கட்சிகள் அனைத்துமே பணம் கொடுப்பதாகவும், ஆனால் ஒரு கட்சி இன்னொரு கட்சியை குறை கூறி கொண்டிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மொத்தத்தில் ஆர்.கே.நகரில் நேர்மையாக தேர்தல் நடத்த முடியாத சூழலே இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply